ETV Bharat / bharat

கரோனாவால் ஆண்மை குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Jan 6, 2023, 12:39 PM IST

Etv Bharatகரோனாவால் ஆண்மை குறையுமா? திடுக்கிடும்  ஆய்வு  முடிவு
Etv Bharatகரோனாவால் ஆண்மை குறையுமா? திடுக்கிடும் ஆய்வு முடிவு

பாட்னா எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கரோனா பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணு உற்பத்தி குறையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா தொற்று மிகுந்த பாதிப்பையும், அதிக இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கரோனா என்ஹச்-7 பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) வெளியிட்டுள்ள ஆய்வு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் விந்தணுக்கள் உற்பத்தி குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கரோனவால் பாதிக்கப்பட்ட 19 முதல் 45 வயதிற்குட்பட்ட 30 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இவர்களின் விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் 40 சதவீதம் பேருக்கு விந்தணு எண்ணிக்கை (ஒவ்வொரு விந்தணுவிற்கும் 39 மில்லியனுக்கும் குறைவாக) இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டரை மாதங்களுக்குப் பின்னரும் 10 சதவீத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு குழுவின் தலைவர் மருத்துவர் சதீஷ் திபாங்கூர் கூறுகையில் "இனப்பெருக்க தொழில்நுட்ப (ART) மருத்துவமனைகள் மற்றும் விந்தணு வங்கி வசதி கொண்ட ஆய்வகங்கள் கரோனா பாதித்த ஆண்களின் விந்துவை மதிப்பிடுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நேர்மறையான வரலாற்றைக் கொண்ட ஆண்களின் விந்து தரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

விந்தணு(கோப்புப்படம்)
விந்தணு(கோப்புப்படம்)

அதிக காய்ச்சலால் உருவாகும் சைட்டோகைன் காரணி: கரோனா வைரஸ் விந்துவில் இல்லை என்றாலும், நோய்த்தொற்றின் போது எதிர்வினை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் செமினல் பிளாஸ்மா உட்பட உடலில் உள்ள லுகோசைட்டுகளின் அளவு அதிகரிப்பு போன்ற காரணிகளால் அதன் தரத்தை அது இன்னும் பாதிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கரோனாவின் முதன்மை அறிகுறிகளில் ஒன்று அதிக காய்ச்சலாகும். இந்த காய்ச்சலானது உடலில் உருவாகும் சைட்டோகைன்கள் மற்றும் பிற அழற்சி செல்களான விந்தணு செல்கள் மற்றும் டெஸ்டிகுலர் திசுக்களை வெளிப்படுத்தும். இதனால் இரத்த-டெஸ்டிஸ் தடையை தொற்று சீர்குலைக்கலாம். இது ஒரு வகையான அழற்சியை ஏற்படுத்தலாம். செமினிஃபெரஸ் எபிட்டிலியம் மற்றும் துணை சுரப்பிகளுக்கு எதிரான நிலை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவை விந்தணுவின் தரத்தை குறைக்கிறது என ஆய்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு - ஆண்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.