தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Nov 3, 2021, 3:23 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @3PM
Top 10 news @3PM

1.காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை: அரசாணை வெளியீடு

இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2.பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை; வேதனையை போக்கிய ஸ்டாலின்

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்- 1 பிரிவில் தமிழ்நாடு அரசு காகித தாள் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிநியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

3.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது? - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

4.வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து - முதலமைச்சரை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, பாமக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

5.சபரிமலை சிறப்பு பூஜை: இன்று ஒருநாள் மட்டும் நடை திறப்பு!

சித்திரை ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று ஒருநாள் மட்டும் (நவ. 3) திறக்கப்பட்டு பின்னர், பூஜை முடிந்து இன்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

6.மாணவர்களுக்கு நேரடி தேர்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை நேரடியாக வரவழைத்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.கரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த தேர்வுமுறை கைவிடப்பட்டுள்ளது.

7.தி.நகர் ஜெயசந்திரன் பர்னிச்சர்ஸ் கடையில் தீ விபத்து

சென்னை தி.நகர் ராமேஷ்வரன் தெருவில் அமைந்துள்ள ஜெயசந்திரன் பர்னிச்சர்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

8.தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி ஒரு கொடியை ஏற்றி வைத்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9.கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை அரசே வழங்கும் - அமைச்சர் முத்துச்சாமி

கரும்பு விவசாயிகளிக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

10.தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை!

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details