ETV Bharat / state

மாணவர்களுக்கு நேரடி தேர்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

author img

By

Published : Nov 3, 2021, 1:16 PM IST

பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை நேரடியாக வரவழைத்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த தேர்வுமுறை கைவிடப்பட்டுள்ளது.

Anna University
Anna University

சென்னை: கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர் ,டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் பொறியியல் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களை நேரடி தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறை கைவிடப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பொறியியல் படிப்பிற்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக ரவிக்குமார் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.