தமிழ்நாடு

tamil nadu

ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்: நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 2, 2021, 12:58 PM IST

Updated : Sep 2, 2021, 1:46 PM IST

ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்
ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்

12:51 September 02

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். வெளிநாட்டு, கலப்பின மாடுகளை பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், "நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால், அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும். ஆனால், வெளிநாட்டு, கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை" என குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில், 

  • 2017ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சட்ட திருத்தத்தில், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாடு கலாசார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், இச்சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள தடையில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், "ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். 

  • வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.
  • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும்.
  • பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்" எனவும் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க. ஸ்டாலின்' 

Last Updated :Sep 2, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details