தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் வெள்ள அபாயத்தை முன்னதாகவே அறிந்து கொள்ளும் கருவி

By

Published : Jan 11, 2022, 7:17 AM IST

flood alert equipment in chennai airport
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் மழை வெள்ள ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை விமான நிலையத்தின் எல்லை, அடையாறு ஆற்றின் ஓரம் அமைந்துள்ளது. இதனால் பருவமழை காலத்தில் சென்னையில் கனமழை பெய்யும் போது, விமான நிலையம் வெள்ள அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது.

இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் சா்வதேச முனையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவது பாதிக்கப்படுகிறது.

வெள்ள அபாயத்தை அறிய உதவும் கருவி

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு காண, சென்னை விமானநிலைய நிா்வாகம் ுதிய ஏற்பாடு ஒன்று செய்துள்ளது.

சென்னை விமான நிலையம்

அதன்படி அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை தொடர்ந்து அறிந்து கொள்ளும் வகையில், நீரின் அளவை தானாக பதிவு செய்யும் தானியங்கி இயந்திரம் இரண்டாவது விமான ஓடுபாதை பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம், அடையாறு ஆற்றில் ஓடும் நீரின் அளவை தொடர்ந்து பதிவு செய்து, சென்னை விமான நிலைய நிர்வாக கட்டடத்தில் அமைந்துள்ள, கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரியப்படுத்தும்.

வெள்ள ஆபத்தை முன்னதாகவே அறிந்து கொள்ளும் கருவி

முன்னெச்சரிக்கை குறுந்தகவல்

பாலத்தின் கீழ் ஓடும் நீரின் அளவு, 9.5 மீட்டர் வரை உயரும் போது, கட்டுப்பாட்டு அறையில் அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும். மேலும், விமான நிலையத்தின் 10 அலுவலர்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படும்.

இந்த எச்சரிக்கை வசதி வாயிலாக, சென்னை விமான நிலைய இயக்ககத்தின் முக்கியமான கட்டமைப்புகள் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும் என சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கருவியின் செயல்பாடு மற்றும் பயன் பற்றி தற்போது அறிந்து கொள்ள முடியாது. இந்த ஆண்டு பருவ மழை காலமான நவம்பா், டிசம்பா் மாதங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும்.

ஏனென்றால் அப்போது தான் பாலத்தின் கீழ் ஒடும் நீரின் அளவு 9.5 மீட்டா் அளவுக்கு இருக்கும். எனவே இந்தக் கருவியின் பலனை அறிய இன்னும் 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அடுத்த இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமனம்

ABOUT THE AUTHOR

...view details