ETV Bharat / city

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அடுத்த இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமனம்

author img

By

Published : Jan 11, 2022, 12:20 AM IST

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம்
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம்

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-எம்) அடுத்த இயக்குநராக பேராசிரியர் வி. காமகோடி அறிவிக்கப்பட்டார்.

சென்னை: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-எம்) அடுத்த இயக்குநராக பேராசிரியர் வி.காமகோடி இன்று (ஜனவரி 10) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்பதவியில் இருந்து வரும் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு பதவி விலகியபின், இவர் பதவியேற்கவுள்ளார்.

சென்னை இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் முன்னாள் மாணவரும் பேராசிரியருமான காமகோடி, தற்போது இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி மற்றும் ஸ்பான்சர்டு ரிசர்ச் (ஐசிஎஸ்ஆர்) துறையின் இணைத் தலைவராக உள்ளார். இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'சக்தி' என்ற நுண்செயலியை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

IITMadras gets new Director
IITMadras gets new Director

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பேராசியராக இருக்கும் காமகோடி, மொபைல் கம்ப்யூட்டிங் சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் அமைப்புகளில் பயன்படுத்தக்கூடிய 'சக்தி' நுண்செயலியை வடிவமைத்து தொடங்கி, ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தினார்.

2017ஆம் ஆண்டில் மத்திய வர்த்தக அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட காமகோடி, பல்வேறு துறைகளில் வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்.

இதையும் படிங்க: பெரியார் சிலை அவமதிப்பு: அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.