Leopard: வால்பாறை குடியிருப்புப் பகுதியில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம்!

By

Published : Jul 5, 2023, 1:21 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட லோயர் ‌பாரளை எஸ்டேட் பகுதியைச் சுற்றி சிறுத்தை தொடர்ந்து உலா வருகிறது . இதனைக் கண்டு அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் தினந்தோறும் உயரமான பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தொழிலாளர் குடியிருப்பையே நோக்கி, சிறுத்தை ஒன்று உட்கார்ந்து நோட்டமிட்டு வந்த நிலையில் உள்ளது.

தற்போது அப்பகுதியில் சிறுத்தைகள் அதனுடைய குட்டிகளுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதியில் பணிக்குச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அப்பகுதியில் வீடுகளில் வளர்க்கும் கோழி, நாய், மாடு உள்ளிட்ட வீட்டுப் பிராணிகள் உலாவுவதைக் கண்டு இரவு நேரங்களில் இரைக்காக, குடியிருப்பை நோக்கி வருவதால் குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, வனத்துறை இதனைக் கருத்தில் கொண்டு குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.