திடீரென ஓடும் அரசுப் பேருந்திலிருந்து கழண்டு ஓடிய சக்கரம்.. சீர்காழியில் நடந்தது என்ன? - Wheel came off from moving govt bus

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 10:07 PM IST

thumbnail
பழுதடைந்த அரசு பேருந்தின் வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu)

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது வடரங்கம் என்ற கிராமம். இந்த கிராம மக்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் என அனைத்து தேவைகளுக்கும் அருகில் உள்ள சீர்காழி நகரத்தையைச் சார்ந்து உள்ளனர். 

மேலும், இங்கு உள்ள பெரும்பான்மையான மக்கள், அரசுப் பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் வடரங்கத்தில் இருந்து சீர்காழி கிளையைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று, இன்று சீர்காழி நோக்கி, சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து உள்ளது. 

அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் இடதுபுற முன் சக்கரம் திடீரென கழண்டு, பேருந்தில் இருந்து தனியாக சாலையில் கிடந்து உள்ளது. இதனைக் கண்ட ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தி உள்ளார். இதன் காரணமாக பெரும் விபத்து ஏற்படாத வண்ணம் அவர் செயல்பட்டு உள்ளார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் உள்ளிட்ட அனைவரும் பெரும் உயிர்ச் சேதத்திலிருந்து தப்பி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.