காட்டு யானையைக் கட்டுப்படுத்த முடியாத வனத்துறை; வனச்சரகர் மீது குற்றச்சாட்டு

By

Published : Jun 15, 2023, 6:28 PM IST

thumbnail

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் தோப்புகளுக்குள் புகுந்து காட்டு யானைகள் அவ்வப்போது சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த சரளபதி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, மக்னா யானை ஒன்று தனியார் தோப்புகளுக்குள் புகுந்து தென்னை, மா போன்ற மரங்களையும் சேதப்படுத்தியது.

இதனைத் தடுப்பதற்காக கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வனச்சரகர் புகழேந்தி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இது குறித்த மலைவாழ் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி கூறும் போது, “மக்களை அச்சுறுத்தும் யானையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் வனத்துறை திணறுவதாகவும், திறமையான ஊழியர்கள் இருந்தும் உயர் பதவியில் இருக்கும் வனச்சரகர் புகழேந்தி போன்ற அதிகாரிகள் மெத்தனப்போக்காக செயல்படுகின்றனர்.

இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொது மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்னா யானையின் அச்சுறுத்தல் அதிக அளவில் இருப்பதால் அன்றாட விவசாயப் பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத அவல நிலை உள்ளது.

அமைச்சர்கள் வரும்பொழுது வனத்துறை உயர் அதிகாரிகள் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக மட்டுமே உள்ளனர். யானைகளை கையாள முடியாத வனச்சரகர் புகழேந்திக்கு விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மக்னா யானையைக் கட்டுக்குள் கொண்டு வராமல் உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். மக்களை அச்சுறுத்தும் யானையை லாவகமாக பிடித்து அதற்கான உணவுகளை அளித்து சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.