ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு!

author img

By

Published : Dec 6, 2019, 3:23 PM IST

பாபர் மசூதி இடிப்பு தினம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு!
பாபர் மசூதி இடிப்பு தினம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு!

விருதுநகர்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இரண்டு அடுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தான் தமிழ்நாடு அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு கடிதம் மூலம் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வெடி குண்டு மிரட்டல் வந்து கொண்டு இருந்தது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகியதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு இரண்டு அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு!

இக்கோவிலுக்கு தற்போது ஐயப்பன் கோயிலுக்கு கேரளா செல்லும் பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில பக்கதர்கள் வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க...திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பங்கேற்பு!

Intro:விருதுநகர்
06-12-19

பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இரண்டு அடுக்கு போலிஸ் பாதுகாப்பு

Tn_vnr_01_andal_temple_police_protection_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமாக விளங்கும் இராஜ கோபுரம் இருக்கும் ஆண்டாள் கோவிலின் பாதுகாப்பு கருதி இரண்டு அடுக்கு போலிஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது....

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தான் தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலுக்கு கடிதம் மூலம் கடந்த 3 வருடங்களாக தொடர்து பாபர்மசூதி இடிப்பு தினத்தன்று வெடி குண்டு மிரட்டல் வந்து கொண்டு இருந்தது. இக்கோவிலில் தற்போது ஐயப்பன் கோவிலுக்கு கேரளா செல்லும் பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்காணக்கான பக்தர்கள்கள், பொதுமக்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு இருப்பதால் முன் எச்சரிக்கையாக பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் கோவிலின் பாதுகாப்பு கருதியும் கோவிலின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரண்டு அடுக்கு போலிஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு 80 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் நடைபெறும் செயல்களை சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கபட்டும் பக்தர்கள் எந்தவித துன்புறுத்தல் இல்லாமல் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.