ETV Bharat / state

திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பங்கேற்பு!

author img

By

Published : Dec 6, 2019, 10:42 AM IST

சென்னை: திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் முதல்முறையாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நமீதா பங்கேற்றுள்ளார்.

transgender namitha
transgender namitha

‘மிஸ் கிராண்ட் ஸ்டார் இன்டர்நேஷனல்’ எனப்படும் திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 முதல் 14 வரை நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 30 திருநங்கைகள் பங்கேற்பார்கள். அதில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நமீதா இன்று ஸ்பெயின் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய நமீதா, இதுவரை இந்தியாவிலிருந்து எந்த திருநங்கையும் பங்கேற்காத சர்வதேசப் போட்டியில் தான் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும், இனி வருடாவருடம் இந்தியா சார்பில் திருநங்கைகள் பங்கேற்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருநங்கை நமீதா செய்தியாளர் சந்திப்பு

திருநங்கைகளை அனைவரும் தவறாகக் கருதுகின்றனர், ஆனால் அப்படி இல்லை, அனைவரையும் உடன்பிறந்த சகோதரிகளாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நண்பர்கள் மூலமாகப் போட்டியின் விபரங்களை அறிந்து விண்ணப்பித்ததாகவும், ஆறு சுற்றுகளில் தேர்ச்சி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி!

Intro:திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா பங்கேற்பு.
Body:திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டியில் இந்தியாவில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா பங்கேற்பு.

மிஸ் கிராண்ட் ஸ்டார் இன்டெர்னஷன் திருநங்கைகளுக்கான அழகி போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 முதல் 14 வரை நடைபெறும் போட்டியில் உலகம் முழுவதும் 30 திருநங்கைகள் பங்கேற்பார்கள். அதில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நமீதா இன்று ஸ்பெயின் செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நமீதா

இதுவரை இந்தியாவில் இருந்து எந்த திருநங்கைகளும் பங்கேற்காத சர்வதேச போட்டியில் தான் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும். இனி வருடாவருடம் இந்தியா சார்பில் திருநங்கைகள் பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளை அனைவரும் தவறான பார்வை பார்க்கிறார்கள், அது போக்க வேண்டும்.அனைவரையும் உடன் பிறந்த சகோதரியாக பார்க்க வேண்டும். தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை தவிர்தால் பாலியல் குற்றங்கள் குறையும் என்றார்.
நண்பர்கள் மூலமாக போட்டியின் விபரங்களை அறிந்து விண்ணப்பித்ததாகவும், 6 சுற்றுகள் முடிவில் ஸ்பெயினில் நடைபெறும் அழகி போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வருங்காலத்தில் திருநங்கைகளுக்கான பேஷன் பயிற்சி நிலையம் தொடங்கப்பட உள்ளதாகவும், பேஷன் துறையில் திருநங்கைகளுக்கான தனி ஒரு இடத்தை உருவாக்க பாடுபட போவதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.