ETV Bharat / state

’விக்கிரவாண்டி, நாங்குநேரி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளார்கள்’

author img

By

Published : Nov 8, 2019, 11:37 PM IST

Updated : Nov 9, 2019, 7:41 AM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

vikkiravandi CM Edappadi Palaniswami speech

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இன்று விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றிபெற்றார். ஆனால், தமிழ்நாடே எதிர்பார்த்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக அபார வெற்றிபெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவைத் தேர்தல் வேறு என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிலர் இன்று அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றனர். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். 67 ஆண்டுகளாக வேறு தொழில் செய்த சிலர் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். இவர்கள் பாதி நாள்கள் நாட்டிலும் மற்ற நாள்கள் வெளிநாட்டிலும்தான் இருப்பார்கள். அவர்கள் அரசியலையும் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பலமான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றியே முன்னோட்டம். தமிழ்நாடு அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது.

ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கூறாமல் போராட்டங்களைத் தூண்டிக்கொண்டுள்ளார் ஸ்டாலின். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: ’ராமதாஸ் எந்த தயக்கமும் இல்லாமல் பொய் சொல்வார்'- முத்தரசன்

Intro:விழுப்புரம்: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
Body:தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.,

"நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

ஆனால், நாடே எதிர்பார்த்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் வேறு என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்.

சிலர் இன்று அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றனர். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால், ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான்.

67 ஆண்டுகள் வேறு தொழில் செய்தவர்கள் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். இவர்கள் பாதி நாட்கள் நாட்டிலும், மற்ற நாட்கள் வெளி உலகத்தில் இருப்பார்கள்.

அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார். எம்ஜிஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்ஜிஆர்.

பலமான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது.
உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம்.

தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது.

ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளர் ஸ்டாலின்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்.

உள்ளாட்சி, 2021 பேரவை தேர்தலுக்கு இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர" என்றார்.Conclusion:நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, எம்சி சம்பத், துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Last Updated :Nov 9, 2019, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.