ETV Bharat / state

'ராமதாஸ் எந்த தயக்கமும் இல்லாமல் பொய் சொல்வார்'- முத்தரசன்

author img

By

Published : Nov 8, 2019, 10:58 PM IST

தஞ்சாவூர்: கட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ராமதாஸ் அவதூறுகளைப் பரப்பி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

cpi mutharasan

இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,”கஜா புயலின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் இதுவரை மீளவில்லை. விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை.

மேலும் அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கவில்லை. இதனால், அவர்கள் தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தற்போது விவசாயம் செய்து வருகிறார்கள். தீபாவளிப் பண்டிகை விற்பனைக்கு போதுமான மது பாட்டில்களை வாங்கி வைத்த அரசாங்கம், விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்கத்தவறிவிட்டது.

உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பாஜக இதில் இரட்டை வேடம் போடுகிறது. வள்ளுவர் சாதி,மதம் என அனைத்தையும் கடந்தவர்.

அவரது சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால் அரசே அதற்கு முழு பொறுப்பு என்றார்.

மேலும் ராமதாஸ் பஞ்சமி நில விவகாரம் குறித்த கேள்விக்கு, ராமதாஸ் எந்த தயக்கமும் இல்லாமல் பொய் சொல்வார். அதனால் பட்டாளி மக்கள் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு வருகிறது. தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பஞ்சமி நிலம் போன்ற பிரச்னைகளை தவறாக பரப்பி வருகிறார். எனவே ராமதாஸ் இதுபோன்ற செயல்களைக் கைவிட வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது - துரைமுருகன்

Intro:தஞ்சாவூர் நவ 08


திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது, திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் தஞ்சையில் பேட்டிBody:
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கஜா புயலில் இருந்து விவசாயிகள் இதுவரை மீளவில்லை, அரசு அறிவித்த நிவாரணம் விவசாயிகளுக்கு போதியதாக இல்லை. மேலும் விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் வழங்கவில்லை, எனவே அதிக வட்டிக்கு கடன் வாங்கி தற்போது விவசாயம் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு போதிய அளவில் மது பாட்டில் வாங்கி வைத்திருந்த அரசாங்கம், விவசாயிகளுக்கு போதிய உரம் வழங்க தவறிவிட்டது உடனடியாக போர்க்கால அடிப்படையில் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு புதிதாக ஒரு சட்டம் நிறைவேற்றி எந்த மாநில அரசும் செய்யாத செயலை தமிழக அரசு செய்துள்ளது, ஒப்பந்த சட்டத்தை கொண்டு வந்து கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழத்தில் சமூக விரோதிகளின் கை ஓங்கியுள்ளது, கூட்டணி வைத்து கொண்டு பெண்கள் சங்கிலி அணிந்து கொண்டு வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று சொல்லிக்கொண்டு முதலமைச்சர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்.
உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற வேண்டும், அதில் நாங்கள் பங்கேற்று வெற்றி பெறுவோம். திருவள்ளுவர் சிலை பிரச்சினையில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடக்க தயங்குகிறது. பாஜக இரட்டை வேடம் போடுகிறது. வள்ளுவர் ஜாதி மதம் என அனைத்தையும் கடந்தவர்.
அவரது சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எதிர்வினை ஏற்படும். அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பு.
ராமதாஸ் எந்த தயக்கமும் இல்லாமல் பொய் சொல்வார், பாட்டாளி மக்கள் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருக்கிறது. அதுனால் தான் தன்னை தற்காத்து கொள்ள பஞ்சமி நிலம் போன்ற பிரச்சினைகளை தவறாக பரப்பி வருகிறார். எனவே ராமதாஸ் இது போன்ற செயல்களை கைவிட வேண்டும்
முதல்வர் வெளிநாடு சென்று வந்துவிட்டார், அதனால் துணை முதலமைச்சர் செல்கிறார்.அரசு பணத்தில் தான் செல்கிறார் சொந்த பணத்தில் செல்லவில்லை அதனால் சென்று வரட்டும் என அவர் கூறினார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.