ETV Bharat / state

ரூ.10.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்

author img

By

Published : Jan 9, 2021, 12:26 PM IST

minister cv shanmugam distributes welfare schemes
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

விழுப்புரம்: ரூ.10.75 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கு 10.75 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள்

  • கூட்டுறவுத் துறை சார்பாக 87 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 589 பயனாளிகள்

இதன் மதிப்பு: 7.45 கோடிரூபாய்

  • 30 பயனாளிகளுக்கு சிறு வணிக கடனாக 5.75 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள்
  • 12 மாற்றுத்திறனாளிகளுக்கு 3.90 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள்
  • மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 86 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்

இதன் மதிப்பு: 53.28 லட்சம் ரூபாய்

  • செவித்திறன், பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு 1.27 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரத்யேக ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டன.
  • தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்திற்கு குடிபெயர்ந்த, திறன் பெற்ற 62 இளைஞர்களுக்கு கோவிட்-19 சிறப்பு நிதி தொகுப்பில் இருந்து தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 62 லட்சம் மதிப்பிலும், கலை பண்பாட்டு துறை சார்பாக 2018-19 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கலைமன்றம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 5 கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பொற்கிழி 55ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டது.
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தை சேர்ந்த 237 பயனாளிகளுக்கு 11.90 லட்ச ரூபாய் மதிப்பிலும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பருவமழை காலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் வீதம் 5 பயனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக 35 பயனாளிகளுக்கு 6.25 லட்சம் ரூபாய் மதிப்பில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
  • கால்நடை பராமரிப்பு துறை சார்பாக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு தலா 250 கோழிகள் வழங்கப்பட்டன.
    நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
  • வனத்துறை சார்பாக தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரம் வளர்ப்பதற்கான ஊக்கத் தொகையாக 4 விவசாயிகளுக்கு 17.744 லட்ச ரூபாய் மதிப்பிலும் என மொத்தமாக 10.75 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சட்டம் மற்றும் நீதித்துறை நிதித்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்.

இதையும் படிங்க:நெருங்கும் தேர்தல், நெருக்கும் பாஜக, கூடும் அதிமுக! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.