ETV Bharat / state

தொடர் வேட்டையில் காவல்துறையினர் - 4987 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

author img

By

Published : Jul 2, 2023, 3:39 PM IST

vellore
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 23 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 4987 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை அழிக்கப்பட்டன. மேலும் 16 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து 14 கள்ளச்சாராயம் காய்ச்சியதற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வேலூர்

வேலூர்: தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக, மலைப்பகுதியில் கள்ளச்சாராய ஊறல்களை பதுக்கி வைத்திருப்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டில் உள்ள அப்புக்கல் அல்லேரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சோதனை செய்ததில் மலைகளில் கள்ளச்சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 23 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 4987 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவைகள் அழிக்கப்பட்டன. மேலும் 16 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து 14 கள்ளச்சாராயம் காய்ச்சியதற்கான வழக்குகள் பதிவு செய்து அதில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோயிலில் நீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் திருப்பணிகள் - கண்டித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் தொடர்ந்து காவல்துறையினர் கள்ளச்சாராயம் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும் விற்பவர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில், கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழக்கவில்லை என்பதும், மெத்தனால் என்ற விஷசாராயம், கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்ததாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்தார்.

இவ்வாறு முறைகேடாக விற்கப்பட்ட சாராயத்தால் உயிருக்கு ஆபத்தான மெத்தனால் சேர்க்கப்பட்டதனை முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் கண்டுபிடித்ததோடு இதில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வோம் என உறுதியளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டு விஷசாராயம் விற்பனை செய்த வியாபாரி, மெத்தனால் வழங்கிய ரசாயன ஆலை உரிமையாளர் இளைய நம்பி உட்பட 17 பேரையும் அதிரடியாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முறைகேடு புகாரில் அறங்காவலர் சஸ்பெண்ட் விவகாரம்; இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.