ETV Bharat / state

முறைகேடு புகாரில் அறங்காவலர் சஸ்பெண்ட் விவகாரம்; இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

author img

By

Published : Jul 2, 2023, 8:56 AM IST

கோயில் அறங்காவலர் இடைநீக்கம் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது
கோயில் அறங்காவலர் இடைநீக்கம் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது

முறைகேட்டில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோயில் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: முறைகேட்டில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோயில் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் முழுமையான விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்தவர் கோபி. இவர் கோயில் நடைமுறைகள் மற்றும் செயல் திட்டங்கள் சிலவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர் மீது சுமத்தப்பட்ட புகாரின் அடிப்படையில் அறங்காவலர் கோபியை சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த தீர்ப்பினை எதிர்த்து கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: "கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார்"- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக்!

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்பதற்காக அறங்காவலர் என்ற முறையில் கோபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அறங்காவலர் கோபியின் மீது பொய் புகாரை கொடுத்துள்ளனர்.

இந்த பொய் புகாரின் அடிப்படையிலே இந்து சமய அறநிலையத்துறை, அறங்காவலர் கோபியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அறங்காவலர் கோபி தரப்பில் இருந்து போதிய விளக்கம் ஏதும் கேட்காமல் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, அறங்காவலர் கோபி தரப்பு விளக்கம் கேட்கப்பட வேண்டும் என்றும் அந்த விளக்கத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி 12 வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை அடித்து விரட்டிய போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.