ETV Bharat / state

தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், பாஜக வலிமை பெறக்கூடாது - தொல். திருமாவளவன்

author img

By

Published : Dec 18, 2022, 11:41 AM IST

ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜக வலிமை பெறக்கூடாது  - திருமா
ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜக வலிமை பெறக்கூடாது - திருமா

திருச்சியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மணிவிழா நடைபெற்றது.

ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜக வலிமை பெறக்கூடாது - திருமா

திருச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மணிவிழா நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்பி, எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தொல். திருமாவளவன் பேசுகையில், "நாடு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்கு மதவெறியர்களால் ஆபத்து உருவாகியுள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் போவார்கள். எதையும் துணிந்து செய்வார்கள். அவர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருகிறது. அவர்கள் விரும்பியது போல் பாபர் மசூதி இடித்து விட்டார்கள். இந்திய குடியுரிமை சட்டம், சிஏஏவை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய கடைசி இலக்கு இந்தியாவை இந்து ராஷ்ட்ரியம் ஆக்க வேண்டும் என்பதுதான். அதற்காக மதம் சார்ந்த நாடாக மாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எந்த மதத்திலும் இருக்கலாம். ஆனால் அரசு எந்த மதத்தையும் சார்ந்து இருக்க கூடாது. மதசார்பற்ற நாடாக, மதசார்பற்ற அரசாக இருந்தால் தான் இங்கு நீதி நிலைக்கும்.

ஆர்எஸ்எஸ் வலிமை பெற்றால் சாதி அடிப்படையிலான பாகுபாடு வலிமை பெறும். பெண்களுக்கான ஒடுக்கு முறை வலிமை பெறும். சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும். பாஜகவுக்கு தனி கொள்கை என்பது கிடையாது. ஆர்எஸ்எஸ் கொள்கைதான் பாஜக வின் கொள்கை. ஆகவே ஒட்டு மொத்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜக, ஆர்எஸ்எஸ் வலிமை பெறக்கூடாது. இந்து தேசிய வாதத்தை உருவாக்கவே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். தேர்தல் பாதையை கைவிட்டால் கூட எங்கள் கொள்கை பாதையை கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழனி: அமைச்சர் பிடிஆர் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.