ETV Bharat / state

பழனி: அமைச்சர் பிடிஆர் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

author img

By

Published : Dec 18, 2022, 8:22 AM IST

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் பிடிஆர் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு
அமைச்சர் பிடிஆர் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

அமைச்சர் பிடிஆர் சென்றபோது ரோப் கார் பாதியில் நின்றதால் பரபரப்பு

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (டிச.17) சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக சென்றார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

அந்த ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். சுமார் இரண்டு நிமிட காத்திருப்புக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைக்கோயிலுக்கு சென்ற நிதியமைச்சர் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனத்துக்கு பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அவர் கீழே இறங்கினார்.

கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்றார். லிப்ட் பழுதாகி பாதி வழியில் நிற்க, அதில் சிக்கிய அவர் அவசரவழி மூலம் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடற்கரையில் அழுகியில் நிலையில் கிடந்த காவலாளியின் உடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.