ETV Bharat / state

பி.இ., பி.டெக் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக கடந்த 3 ஆண்டுகளின் கட் ஆப் வெளியீடு!

author img

By

Published : Aug 6, 2020, 9:23 PM IST

பி.இ., பி.டெக் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக கடந்த 3 ஆண்டுகளின் கட் ஆப் வெளியீடு!
பி.இ., பி.டெக் மாணவர்கள் சேர்வதற்கு ஏதுவாக கடந்த 3 ஆண்டுகளின் கட் ஆப் வெளியீடு!

சென்னை : பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு வசதியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 31ஆம் தேதி முதல் தினமும் 20 ஆயிரம் மாணவர்கள் வீதம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வசதிகளைச் செய்துள்ளது.

ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணி வரை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 809 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 571 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளனர்.

ஜூலை 31ஆம் தேதி முதல் இதுவரை 35 ஆயிரத்து 956 மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவு தேர்வு செய்ய முடியும் என்பது குறித்து முன்கூட்டியே அறிவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் கல்லூரி மற்றும் பாடப் பிரிவு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் cutoff.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், அண்ணா பல்கலைக்கழகமும், அதனால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டுகளில் கல்லூரியில் படித்த மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதமும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்னர் கல்லூரியில் உள்ள கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நன்கு தெரிந்துகொண்டு தேர்வு செய்ய இது உதவுமென கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.