ETV Bharat / state

ஆம்பூர் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: சிறுமி மீட்பு!

author img

By

Published : Feb 24, 2023, 7:29 PM IST

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

ஆம்பூர் அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஆம்பூர்: குழந்தை திருமணத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, குழந்தை திருமணத்துக்கு எதிராக அசாம் மாநிலம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்திய போலீசார், குழந்தை திருமணங்கள் தொடர்பாக 3,000 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் பகுதியில், அம்பிகா என்பவரின் 17 வயது மகளுக்கும், ஜெயவேல் - சரஸ்வதி தம்பதியினரின் மகனுக்கும் இன்று (பிப்.24) திருமணம் நடைபெறவிருந்தது. மணப்பெண் 18 வயதை பூர்த்தி செய்யாததை அறிந்த சிலர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு, வேலூர் மாவட்ட குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் இதுவரை என்னென்ன பறிமுதல்? - சத்ய பிரதா சாகு வெளியிட்ட தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.