ETV Bharat / state

ஈரோடு கிழக்கில் இதுவரை என்னென்ன பறிமுதல்? - சத்ய பிரதா சாகு வெளியிட்ட தகவல்!

author img

By

Published : Feb 24, 2023, 4:03 PM IST

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இதுவரை 64.34 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது. 64.34 லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக 51.31 லட்சமும், 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், பரிசுப் பொருட்கள் உட்பட மற்றவை 1.33 லட்சம் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய சாகு, "238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரம் நாளை(பிப்.25) மாலை 6 மணியுடன் நிறைவடையும். வெளியூர்களில் இருந்து வந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்" என்றார்.

மேலும், "இந்த தேர்தலில் 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. வாக்குசாவடியில் மட்டும் 1206 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்லை.. விரைவில் பல ரகசிங்கள் வெளியிடப்படும் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.