ETV Bharat / state

பொதுக்குழு எப்போது கூடினாலும் அதன் மையக்கருத்து ஒற்றைத்தலைமைதான்.. முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ

author img

By

Published : Aug 18, 2022, 7:36 AM IST

பொதுக்குழு எப்போது கூடினாலும் அதன் மையக்கருத்து ஒற்றைத்தலைமைதான்.. முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ
பொதுக்குழு எப்போது கூடினாலும் அதன் மையக்கருத்து ஒற்றைத்தலைமைதான்.. முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொதுக்குழு எப்போது கூடினாலும் அதன் மையக்கருத்து ஒற்றைத்தலைமைதான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளரகளை சந்தித்தார். அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக கட்சி.

இங்கு ஜனநாயக முறைப்படி, 5 ஆண்டு தேர்தல் நடைபெற்று கிளைக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர் என தேர்தல் நடைபெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு பொதுக்குழு நடைபெற்றது.

தேர்தல் நடந்து முடிந்த பின்பு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இரட்டைத்தலைமை கட்சியின் செயல்பாட்டிற்கு ஒத்து வராது. அனைத்து கட்சியைப்போல் ஒற்றைத்தலைமைதான் வேண்டுமென்று முன் வைக்கப்பட்டது.

அதன்படி, பொதுக்குழு கூட்டப்பட்டு 2,480 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் 98 சதவீதம் பேர் ஒற்றைத்தலைமைதான் வேண்டுமென்ற முடிவின்படிதான் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தீர்ப்பு என்பது சில நேரங்களில் மாறுபட்ட தீர்ப்பாக வரும்.

கடம்பூர் ராஜூ பேட்டி

இது இறுதி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற முடிவு பொதுக்குழுவில் எடுக்கப்பட்டதல்ல. அதற்கு முன்னதாகவே தலைமைக்கழகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஓபிஎஸ் இருக்கும்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதை பொதுக்குழுவில் அங்கீகரிக்க வேண்டும் என்பது தான் மையக்கருத்து.

ஒற்றைத்தலைமைதான் நோக்கமே. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவது என்பது யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறு மறுக்கின்ற நேரத்தில் நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுக்குழு என்றைக்கு கூடினாலும் அதனுடைய மையக்கருத்து ஒற்றைத்தலைமைதான். பொதுக்குழுவில் ஓபிஎஸ் மெஜாரிட்டியாக இருந்தால் அதை நிரூபித்துக் கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு தரப்பட்டது. 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் இருந்த அன்றைக்கே நானும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று கூறியிருந்தால், தற்போது பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும்.

11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூட ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்தான் அதில் கலந்து கொள்ளவில்லை. அன்றைய தினம் தலைமைக்கழகம் சென்று விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரத்தில் இருக்கும் சாராம்சம் குறித்தும் வல்லுனர்களுடன் ஆராயப்படும்” என கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்குத் தொடர்பான தீர்ப்பின் முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.