ETV Bharat / state

Christmas special: தொழுநோயில் இருந்து மீண்டவர்களின் அசத்தலான மெழுகுவர்த்திகள்.!

author img

By

Published : Dec 17, 2022, 8:05 PM IST

தொழுநோயில் இருந்து மீண்டவர்களின் அசத்தலான மெழுகுவர்த்திகள்
தொழுநோயில் இருந்து மீண்டவர்களின் அசத்தலான மெழுகுவர்த்திகள்

தூத்துக்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் மூலம், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வித விதமான மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.

தொழுநோயில் இருந்து மீண்டவர்களின் அசத்தலான மெழுகுவர்த்திகள்

தூத்துக்குடி: ஆரோக்கியபுரம் பகுதியில் சுமார் 74 ஆண்டுகளுக்கு முன்பு அருட்சகோதரிகளால் செயின்ட் ஜோசப் தொழுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான தொழுநோய் பாதித்த நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்குச் சிகிச்சை பெற்று தொழுநோயிலிருந்து மீண்டு வந்த நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், மருத்துவமனை வளாகத்திலேயே மெழுகுவர்த்தி தயாரிக்கும் சிறுதொழில் கூடம் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறது. ஆரம்பக் காலங்களிலிருந்து இன்று வரை, இக்கூடத்திலிருந்து ஏராளமான மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்குவதையொட்டி கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், வானதூதா், ஏஞ்சல், சங்கு, பாட்டில், கிளாஸ், ஜெல்லி, இதயம் போன்ற பொம்மை மெழுகுவர்த்திகள் மற்றும் ஆலயங்களில் பயன்படுத்தும் மெழுகுவர்த்திகள் மற்றும் 5 அடி மற்றும் 6 அடி உயரமுள்ள மெழுகுவர்த்திகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மெழுகுவர்த்தியில் மூன்று ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏராளமான மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.மேலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கிறிஸ்துவ ஆலயங்களுக்கும் தேவையான அனைத்து மெழுகுவர்த்திகளும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகிறது.இதில் வரக்கூடிய வருவாயைக் கொண்டு தொழுநோயிலிருந்து மீண்டவர்கள் பயனடைந்து வருகிறார்கள். வாழ்க்கையில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து எந்த ஒரு விளம்பரம் இன்றி சிறப்பாக இந்த மெழுகுவர்த்தி சிறு தொழில் கூடம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: Christmas special: 750 கிலோ ராட்சத கேக் தயாரிக்கும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.