ETV Bharat / state

குன்னூரில் நடைபெற்ற 23ஆவது தேயிலை ஏலம்!

author img

By

Published : Jul 14, 2021, 3:31 PM IST

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/14-July-2021/12455906_nil.mp4
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/14-July-2021/12455906_nil.mp4

குன்னூர் தேயிலை ஏலத்தில் வரத்து அதிகரித்தபோதும் விற்பனையும், விலையும் வீழ்ச்சியடைந்ததால் கடந்த வாரத்தைவிட 2.67 கோடி ரூபாய் வருமானம் குறைந்தது.

நீலகிரி: குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில் 23ஆவது ஏலம் நடைபெற்றது. இதில் இலை ரகம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 805 கிலோவும், டஸ்ட் ரகம் ஏழு லட்சத்து 77 ஆயிரத்து 773 கிலோவும் விற்பனைக்கு வந்தது.

இதில்,மொத்தம் 15 லட்சத்து 35 ஆயிரத்து 657 கிலோ விற்பனையானது. சராசரி விலை 111.86 ரூபாயாக இருந்தது. கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை சரிந்தது. கடந்த வாரத்தைவிட 2.67 கோடி ரூபாய் வருமானம் குறைந்தது.

23ஆவது தேயிலை ஏலம்

கரோனா பரவலால், கிடங்குகளுக்குத் தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாததால், தேக்கமடைந்த தேயிலை மூட்டைகளால் கடந்த 22ஆவது ஏலம் ரத்துசெய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்தபோதும் சராசரி விலையும், விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 11 பேருக்கு டெங்கு பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.