ETV Bharat / state

தென்காசியில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 12:25 PM IST

தென்காசியில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்
தென்காசியில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

Pavurchatram: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி நடைபெற்று வரும் நிலையில், அதன் அருகே சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி வணிகர்கள், சங்க பெருந்தலைவர் காமராஜர், தினசரி காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து அமைப்புகளும் இணைந்து, 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி-நெல்லை 4 வழிச் சாலை கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்ட நிலையில், மழைக் காலங்களில் நான்கு வழிச்சாலை போடும் ஒரு சில பகுதியில் நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், வேலைப்பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பல இன்னல்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேம்பாலப் பணி மேற்கொள்ளும் சாலையின் இரண்டு புறங்களில் உள்ள கடைகள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளது. மேம்பாலப் பணிக்காக அந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால், வியாபரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக காணப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் சகதியும், சேறுமாக உள்ளதாலும், மழைக்காலங்களில் அதிகப்படியாக தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, விரைந்து சாலைப் பணிகளை முடித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருபவரா நீங்கள்? - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும், பாவூர்சத்திரத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்தில் இரு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும். பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும். இதுவரை துவங்கப்படாத ரயில்வே சுரங்கப்பாதை சப்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அனைத்து கடைகளுக்கு முன்பாக தோண்டப்பட்டு இருக்கும் குண்டு, குழிகளை சீர்படுத்தி, தென்காசி ஆசாத் நகர் புறவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு அந்தப் பகுதியின் ஏராளமான கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிச்சாலை வெகு விரைவில் முடிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: "பரோலில் செல்லும் சிறைக் கைதிகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி" - மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.