ETV Bharat / state

மகாளய அமாவாசை: வழிபாட்டுத் தலங்களுக்குத் தடை

author img

By

Published : Oct 2, 2021, 7:39 PM IST

Ramanathapuram
Ramanathapuram

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அக்டோபர் 5, 6ஆம் தேதிகளில் செல்ல தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்தது. இந்நிலையில் வருகின்ற 5, 6 ஆகிய தேதிகளில் மகாளய அமாவாசை நாள்.

இந்த அமாவாசை நாளன்று சேதுக்கரை, மாரியூர், ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தக் கடற்கரை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இதில் வழிபடுவதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேஷன் வருகின்ற 5, 6 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம், சேதுக்கரை, மாரியூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் செல்ல அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.