ETV Bharat / state

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் - இளைஞர் கைது

author img

By

Published : Jan 26, 2020, 11:47 AM IST

இரண்டாம் திருமணம் செய்த பட்டதாரி இளைஞர் கைது
இரண்டாம் திருமணம் செய்த பட்டதாரி இளைஞர் கைது

புதுக்கோட்டை: முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சிவநேசன் (34). இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள வீராச்சிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்கிறார்.

இவருக்கும், புதுக்கோட்டை அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி மகள் பிருந்தாதேவிக்கும் (28) கடந்த வாரம் திருமணம் நடந்தது. இதனைத் தொடா்ந்து, இருவரும் வீராச்சிப்பாளையத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சிவனேசன் வீட்டிற்கு வராமல் ஈரோட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சிவநேசன் மீது சந்தேகமடைந்த பிருந்தாதேவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடா்ந்து, பிருந்தாதேவியின் பெற்றோா் சிவநேசன் வேலைபாா்த்து வந்த நிறுவனத்திற்குச் சென்று விசாரித்தனர். அப்போது, சிவநேசன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டைச் சோ்ந்த மகாளி என்பவரது மகள் தங்கமணியை (26) காதல் திருமணம் செய்தது, அவா்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருப்பது, சிவநேசன் வேலைபாா்த்துவரும் நிறுவனத்திற்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து அவா்களைக் குடியமா்த்தி உள்ளது ஆகியவை தெரியவந்தது.

இதுகுறித்து பிருந்தாதேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி மகளிா் காவல் துறையினர் சிவநேசனை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதை

Intro:Body:













முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த பட்டதாரி வாலிபர் கைது.



ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி கிருஷ்ணன் மகன் சிவனேசன் 34 எம் இ எம்,பி.ஏ. பட்டதாரி ஆவார்.புதுக்கோ
ட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி கிரா மத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவனேசன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வீரச்சிபலையத்தில் உள்ள ப்ளூ பாலிமர் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவன த்தில் துணைமேலாளார் பதவியில் ஏழு ஆண்டுகளாக ப ணிபுரிந்து வருகிறார்

அதேஊரைச்சேர்ந்த மாகாளி என்பவரின் மகள் தங்கம ணி தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு தெரி யப்படுத்தாமல் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய் து கொண்டார்.அந்தத் திருமணத்தின் மூலம் சிவனேசன் மற்றும் தங்கமணிக்கு ஐந்து வயது மோனிஷா என்ற பெ ண் குழந்தை ஒன்று பெருந்துறையில் உள்ள பள்ளியி ல் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் குடும்பத்தினரிடம் தனக்கு திருமணம் செய் து வைக்குமாறு கேட்டுள்ளார் அவர்களும் சம்மதத்துடன் ஆலங்குடி அருகேயுள்ள குலமங்கலம் தெற்கு பூக்காரன் தெருவைச் சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகள் பிருந் தாதேவி ..28. முதுநிலைப் பட்டதாரி கடந்த நான்கு மாதத் திற்கு முன் திருமணத்தை செய்து வைத்தனர்
மணமகன் சிவனேசன் பட்டதாரியானதாலும் ஒரு பெரிய நிறுவனத்தில்துணை மேலாளராக பணி புரிவதாலும், அ வருக்கு பெண் வீட்டார் 25 சவரன் நகைகளையும் ரூபாய் 5 லட்சம் ரொக்கமும் ,மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீத னச்சாமான்களையும் வரதட்சைனையாக கொடுத்தனர்.

திருமணமமான நாளிலிருந்து ஒரு வாரகாலம் மனைவியு டன் இருந்த சிவனேசன் தான் பணிபுரியும் நிறுவனத்திற் கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் ஆனால் அன்றி லிருந்து தன் சொந்த ஊராகிய சேந்தன்குடி வரவில்லை யாம், பிருந்தாதேவி தொலைபேசி மூலம் தொடர்பு கொண் டு பேசும் போதெல்லாம் நான் வந்து உன்னை கூட்டி செல் கிறேன் அமைதியாக இரு என்று பல காரணங்களை கூறி வந்துள்ளார்..
சில நாட்கள் கழித்து நீ கல்லூரியில் சேர்ந்து படி உன்னை மாவட்ட ஆட்சியர் பதவிக்கும் மற்ற பதவிகளுக்கும் ஏற்பா டு செய்கிறேன் என்றும் கூறியுள்ளார் இதை நம்பாத பிருந்தாதேவி தனது குடும்பத்தினருடன் அவர் இருக்கும் இட த்திற்கு சென்றுள்ளனர்.

நிறுவனத்திற்கு சென்று விசாரிக்கும்போது சிவனேசன் தங்கியிருக்கும் வீட்டை காட்டியுள்ளனர் பிருந்தாதேவி குடு ம்பத்தினருடன் வெளியே நின்று சிவனேசன் பெயர் சொ ல்லி அழைக்கும்போது சிவனேசன் அவருடைய முதல் ம னைவி தங்கமணி மற்றும் குழந்தை அவருடைய உறவின ர்கள் வெளியே வந்துள்ளனர்

அப்பொழுது தனது கணவன் சிவனேசன் ஏற்கனவே திரு மணம் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது உடனடியாக பெருந்துறை காவல் நிலையத்தில் பிருந்தாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர் புகாரின்பேரில் பெருந்துறை காவல் ஆய்வாளர் விசார ணை செய்து புது க்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் நிலை யத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆலங்குடி காவல் இன்ஸ்பெக்டர் ஹேமலதா பிருந்தா தே வியை கொடுத்த புகாரின் பேரில் சிவனேசனையும் சேர்த் து விசாரித்தனர். விசாரணையில் முதல் திருமணத்தை ம றைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்ற த்திற்காக சிவனேசன்மீது வழக்குபதிவு செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.