ETV Bharat / state

'காங்கிரசிற்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கும் தன்மை இல்லை'

author img

By

Published : Jan 12, 2020, 8:49 AM IST

BJP RAja about Congress
BJP RAja about Congress

நாமக்கல்: பாடி சுரேஷ் கொலை குற்றவாளிகள் டெல்லியில் கைதுசெய்யப்பட்டது போல் நெல்லை கண்ணனுடைய டெல்லி தீவிரவாதிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், சீமான், வேல்முருகன் போன்றவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவின் சரிவு தொடங்கியது, உள்ளாட்சியில் அதன் விளைவு பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் கட்சியினரின் பாணியை தற்போது திமுக செய்துவருகிறது. காங்கிரசிற்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கும் தன்மை இல்லை. அதனடிப்படையிலேதான் தற்போது திமுகவும் செய்தது. அதனால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டு வருத்தங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை இழிவாகப் பேசிய நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற பிணை மட்டுமே கிடைத்துள்ளது. குற்றவாளி இல்லை என அறிவிக்கவில்லை. நெல்லை கண்ணன் ஒருமுறை பேசும்போது, 'இஸ்லாமியர்களை ஆளும் பாஜக அரசு தரக்குறைவாக நடத்தியது . இதற்காக டெல்லியில் சில இஸ்லாமியர்களைச் சந்தித்துப் பேசினேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாடி சுரேஷின் கொலை தொடர்பான குற்றவாளிகள் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர் பேசியதற்கும் இன்று கைதானவர்களுக்கும் தொடர்புள்ளது. நெல்லை கண்ணனுடைய டெல்லி தீவிரவாதிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" எனக் கூறினார்.

சீமான் சமீபத்தில் தான் ஒரு இந்தியனே இல்லை எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ஹெச். ராஜா, எனவே சீமான் வேல்முருகன் போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்க தகுதியற்றவர்கள் எனவும் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சாடினார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா

இதையும் படிங்க: பாஜகவின் ஆதரவால் குமரியைக் கைப்பற்றிய அதிமுக

Intro:பாடி சுரேஷ் கொலை குற்றவாளிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டது போல் நெல்லை கண்ணனுடைய டெல்லி தீவிரவாதிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் சீமான் மற்றும் வேல்முருகன் போன்றவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நாமக்கல்லில் பேட்டிBody:நாமக்கல்லில் நடைப்பெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் சரிவு துவங்கியது, உள்ளாட்சியில் அதன் விளைவு பிரதிபலிக்கிறது எனவும் காங்கிரஸ் கட்சியினர் அதனுடைய பாணியிலே தற்போது திமுக செய்துவருகிறது. காங்கிரசிற்கு கூட்டணி கட்சிகளை அரவணிக்கும் தன்மை இல்லை.அதன்அடிப்படையிலே தான் தற்போது திமுகவும் செய்தது. அதனால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டு வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இழிவாக பேசிய நெல்லை கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமீன் மட்டுமே கிடைத்துள்ளது. குற்றவாளி இல்லை என அறிவிக்கவில்லை. நெல்லை கண்ணன் ஒரு முறை பேசும்போது இஸ்லாமியர்களை ஆளும் பாஜக அரசு தரக்குறைவாக நடத்தியது எனவும் இதற்காக டெல்லியில் சில இஸ்லாமியர்களை சந்தித்து பேசியதாக நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று பாடி சுரேஷின் கொலை தொடர்பான குற்றவாளிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர் பேசியதற்கும் இன்று கைதானவர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் நெல்லை கண்ணனுடைய டெல்லி தீவிரவாதிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். சீமான் சமீபத்தில் தான் ஒரு இந்தியனே இல்லை என தெரிவித்துள்ளார். எனவே சீமான் மற்றும் வேல்முருகன் போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்க தகுதியற்றவர்கள் எனவும் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சாடினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.