ETV Bharat / state

திருக்கடையூர் கோயிலில் டிடிவி தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜை

author img

By

Published : Nov 23, 2022, 11:29 AM IST

டிடிவி தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜை
டிடிவி தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜை

10:20 November 23

திருக்கடையூர் கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜை செய்தார்.

டிடிவி தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வருடம் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதாவுடன் வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 64 கலசங்கள் அமைக்கப்பட்டு, 60 வயது தொடங்குவதால் உக்கிர ரத சாந்தி பூஜை செய்தார்.

கணேஷ் குருக்கள் தலைமையிலான 15 சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்து வைத்தனர். தொடர்ந்து அவர் கோயிலை சுற்றி வந்து கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரனி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நலம் பெற வேண்டும்: அவரது மகன் கண்ணீர் மல்க வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.