ETV Bharat / state

ரூ.3,000 வரை உயர்ந்த மதுரை மல்லிகை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 5:06 PM IST

madurai
madurai

Madurai Malligai: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மல்லிகையின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கிலோ ரூபாய் 3,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில், தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்தைப் பொறுத்தும் மற்றும் பண்டிகைகளைப் பொறுத்தும் மல்லியின் விலை ஏறுவதும், இறங்குவதும் வழக்கம். நாள்தோறும், சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக இங்கு பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை 2வது நாளாக அதிரடியாக உயர்ந்து, கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பிச்சிப் பூ மற்றும் முல்லை தலா 2000 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 300 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 1,800 ரூபாய்க்கும், செண்டு மல்லி 80 ரூபாய்க்கும் என விலை அதிரடியாக உயர்ந்து விற்பனை ஆகி வருகின்றது.

நேற்றும் மதுரை மல்லிகை கிலோ ரூபாய் 3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அதே விலை நீடிக்கிறது. பொங்கல் பண்டிகை என்பதால், இந்த விலை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கும் தொடர்ந்து நீடிக்கும் என மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால், பூக்களின் விலைகள் உயர்ந்தாலும், பொதுமக்கள் அனைவரும் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க: போகி பண்டிகை; புகை மண்டலமான சென்னை.. விமான சேவைகள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.