ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலுடன் திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது - செல்லூர் ராஜூ ஆவேசம்!

author img

By

Published : Jul 22, 2023, 9:29 PM IST

Updated : Jul 22, 2023, 10:29 PM IST

அதிமுக ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்றத் தேர்தலுடன் திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது- செல்லூர் ராஜூ

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும், உப்பை தின்றவன தண்ணீர் குடித்தாக வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுடன் திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது- செல்லூர் ராஜூ

மதுரை: அதிமுக மாநாடு (AIADMK conference in Madurai) வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 33) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, அதிமுக மாநாடு தொடர்பான ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், "கரி கட்டையால் அதிமுக வரலாற்றை சுவரில் எழுதி கட்சியை வளர்த்தோம். தகவல் தொழில்நுட்பத்துறை எல்லாம் வளராத காலத்தில் தொண்டர்களால் சுவர்களில் எழுதி எழுதியே அதிமுக வளர்க்கப்பட்டது தான் வரலாறு.

சுவரொட்டி, பிளக்ஸ் எல்லாம் அப்போது கிடையாது. மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்காக ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு அவையெல்லாம் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாகனங்களில் ஒட்டப்படவுள்ளன. இது தொண்டர்களால் நடத்தப்படும் மாநாடு. ஆகையால், இதில் கட்சி செலவு செய்வதற்கு ஒன்றும் கிடையாது.

இதையும் படிங்க: பாரத மாதாவுக்கு உயிர் இருந்திருந்தால்.. மணிப்பூர் விவகாரத்தை காட்டமாக விமர்சித்த சீமான்!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை தொண்டர்கள்தான் நடத்துகிறார்கள், ஆகையால் அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மற்ற கட்சிகள் தாங்கள் நடத்தும் மாநாட்டுக்கு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், அதிமுக மாநாடு தானாக சேரும் கூட்டம்.

திமுகவின் எதிர்காலம் இருக்குமா?: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது, அளவுகோலை மீறும் பொழுது தான் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும். தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல முதல்வர் பேசுகிறார்.

இனிமேல் இந்த தமிழகத்தை ஆளப்போகின்ற கட்சி அதிமுக தான். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்து, அதனைத் திருப்பி அளித்துவிட்டால் அது சரியாகிவிடுமா..? அரசின் அனுமதியின்றி கூடுதலாக மணல் எடுப்பது தவறுதானே.

அமைச்சராக இருக்கும்போது இது போன்ற தவறுகளை மேற்கொண்டால் நடவடிக்கை எடுப்பார்களா மாட்டார்களா..? அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் போது அதனைக் குறை சொல்வது சரியல்ல. தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும், அமலாக்கத்துறை விசாரணையில் பாகுபாடு காட்டப்படவில்லை. தவறு செய்தவர்களிடம் மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது என கூறினார்.

இதையும் படிங்க: IIT Madras:'நாட்டின் அறிவியல் வளர்ச்சியில் மெட்ராஸ் ஐஐடி பெரும்பங்கு' - உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்

Last Updated :Jul 22, 2023, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.