ETV Bharat / state

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

author img

By

Published : Mar 26, 2022, 6:43 PM IST

அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

கூட்டுறவுத்துறை மாநில அரசின் ஆளுகைக்கு உள்பட்டது எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சார்பில் பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகை வழங்கும் விழா முத்தழகுபட்டியில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டுறவு சங்கங்களில் காசோலை வழங்குகின்ற அதிகாரம் தலைவரிடம் இருந்து எடுக்கப்பட்டுவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் விதிகளின் படியும், அதன் துணை விதிகளின் படியும் அன்றாடப் பணிகளில் காசோலையில் கையெழுத்து போடுகின்ற முழு அதிகாரமும் செயலாளருக்கு தான் உள்ளது. ஒருசில சங்கங்களில் செயலரும் அவருக்கு அடுத்த பதவியில் உள்ள அரசு சம்பளம் வாங்கக்கூடியவரும் சேர்ந்துதான் கையெழுத்து போடுவார்கள். இதுதான் கூட்டுறவு சங்கத்தின் சட்டத்தில் உள்ள விதி ஆகும். ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மையல்ல.

அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தலைவர் என்பது ஒரு கௌரவப் பதவியாகும். அவர்களுக்கு சம்பளம் கிடையாது. கூட்டுறவுத்துறை முழுக்க முழுக்க மாநில அரசின் பட்டியலில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட குழு, முழு அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது என கூறியுள்ளனர்.

கூட்டுறவு துறையில் உள்ள தலைவரின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகாலமாக மாற்ற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் அனுமதியை ஒன்றிய அரசு பெறவேண்டும் அல்லது பெரும்பான்மையான மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

பதவிக் காலத்தை முடிவு செய்வது என்பது மாநில அரசுக்கு உட்பட்டது. அதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஒன்றிய அரசுக்கு சட்டம் கொண்டுவர அதிகாரம் இல்லை. கூட்டுறவுத்துறை மாநில அரசின் ஆளுகைக்கு உள்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு மாறானது" என்றார்.

இதையும் படிங்க: ஆந்திராவிற்கு3 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.