ETV Bharat / state

வயரில் உரசி தீப்பிடித்த லாரி - 3 மணி நேரம் தீயணைப்புத் துறையினர் போராட்டம்

author img

By

Published : Feb 11, 2020, 1:56 PM IST

தீயணைப்பு துறை
தீயணைப்பு துறை

திண்டுக்கல்: கால்நடை தீவனம் ஏற்றிச்சென்ற லாரி உயர் அழுத்த மின்சார வயரில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எம்.களத்தூர் பகுதியிலுள்ள மக்கள் மானாவாரி பயிரான வெள்ளைசோளம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடைக்கான நேரம் என்பதால் அதை கால்நடை தீவனத்திற்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில், சேலத்தில் பாண்டம் மண்டலத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான லாரியில் கால்நடைகளுக்காகச் சோளத்தட்டைகளை அதிகளவில் ஏற்றிக்கொண்டு அந்த லாரி சேலத்திற்கு புறப்பட்டது. அப்போது அதே வயலிலுள்ள உயர் மின்னழுத்த வயரில் உரசியதில் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

வயரில் உரசி தீப்பிடித்த லாரி

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், லாரி, கால்நடை தீவனம் முழுவதும் எரிந்து நாசமாகின.

இதையும் படிங்க: கஞ்சா விற்ற 17வயது சிறுவன் கைது!

Intro:வேடசந்தூர் அருகே கால்நடை தீவனம் ஏற்றிய லாரி உயர் அழுத்த மின்சார வயர் உரசி தீ விபத்து லாரி முழுவதும் எரிந்து நாசம்.Body:திண்டுக்கல் 10.02.2020
எம்.பூபதி செய்தியாளர்

வேடசந்தூர் அருகே அதிகளவில் கால்நடை தீவனம் ஏற்றி வந்த லாரி உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் லாரி முழுவதும் எரிந்து நாசம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது கோட்டாநத்தம் ஊராட்சி எம்.களத்தூர் இப்பகுதியில் மனாவரி வெள்ளைசோளம் விவசாயத்தில் விவசாயிகல் செய்து வருகின்றனர் தற்போது சோளப்பயிர் அறுவடை என்பதால் அதைகால்நடை தீவனத்திற்க்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கமான ஒன்றாகும் இன்நிலையில் இன்று சேலம் மாவட்ட பாண்டம் மண்டலத்தை சேர்ந்த ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான லாரியில் கால்நடைகளுக்கு பயன்படுத்துவதற்காக சோளத் தட்டைகளை அதிக அளவில் ஏற்றி கொண்டு சேலம் புறப்படும் போது அதே வயலின் இருந்த உயர் மின்னழுத்த வயரில் உரசி லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து லாரியில் இருந்த கால்நடை தீவனம் மற்றும் லாரிமுழுவதும் எறிய தொடங்கியதை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குஜிலியம்பாறை மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனால் லாரி மற்றும் கால்நடை தீவனம்முழுவதும் எறிந்து நாசமானது இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது

Conclusion:திண்டுக்கல் 10.02.2020
வேடசந்தூர் அருகே அதிகளவில் கால்நடை தீவனம் ஏற்றி வந்த லாரி உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் லாரி முழுவதும் எரிந்து நாசம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.