ETV Bharat / state

பழனி அருகே விஏஓ, காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 9:34 PM IST

மணல் கொள்ளை
மணல் கொள்ளை

பழனி அருகே விஏஓ மற்றும் உதவியாளர், காவலர்கள் என நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அருகே போலீசார் உள்பட நான்கு பேர் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் எவ்வித அனுமதியின்றி மணல் அள்ளுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். அதன் அடிப்படையில், அனுமதி இல்லாமல் லாரி மூலம் மணல் அள்ளும் நபர்களை பிடிக்க கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, உதவியாளர் மகுடிஸ்வரன் ஆகியோர் பொதுமக்களுடன் சென்று லாரிகளை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மணல் அள்ளுவதற்கு ஆயக்குடி பகுதிக்கு பாஸ் இல்லை என்பதும், அவர்கள் வைத்திருப்பது தாதநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த குளத்தில் மணல் அள்ளுவதற்கான பாஸ் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து லாரிகளை எடுத்துக் கொண்டு ஆயக்குடி காவல் நிலைத்திற்கு செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி மற்றும் அவருடைய உதவியாளரான மகுடிஸ்வரனும் சென்றனர்.

அப்போது திடீரென லாரியை வேகமாக இயக்கியுள்ளனர். மேலும், பின்னால் இருசக்கர வாகனம் பின் தொடராத வண்ணமும், ஜீப்பில் வந்தவர்களை முந்தவிடாமல், வலது புறமும், இடது புறமும் வாகனத்தை இயக்கி லாரியின் பின் கதவை திறந்து விட்டு மணலை அவர்கள் மேலே கொட்டி கொலை செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த கருப்பசாமி, ஆயக்குடி காவல் நிலைத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் மீதும் லாரியை மோதுவது போல செய்து இரு லாரிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

பின்னர், லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவர் கருப்பசாமி, அவருடைய உதவியாளர் ஆகியோர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: 2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்! சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.