ETV Bharat / state

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதா? - எதிர்க்கும் அலோபதி மருத்துவர்கள்

author img

By

Published : Dec 8, 2020, 5:28 PM IST

Doctors protest condemned CVIM announcement in Dharmapuri
Doctors protest condemned CVIM announcement in Dharmapuri

தருமபுரி: ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி இன்று அலோபதி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (CCIM) கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் முதுநிலை ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்கள் பொது மருத்துவம், முடநீக்கியல், கண், காது-மூக்கு-தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் அலோபதி மருத்துவர்களும் மருத்துவ சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இன்று சிகிச்சையை புறக்கணித்து பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களும் மாணவர்களும் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் இந்த அனுமதி நோயாளிகளின் உயிர்களோடு விளையாடுவது போன்றது என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.