ETV Bharat / state

கடலூர் மறைமுகத் தேர்தல் நிலவரம்

author img

By

Published : Jan 13, 2020, 9:55 AM IST

கடலூர் மறைமுக தேர்தல் நிலவரம்
கடலூர் மறைமுக தேர்தல் நிலவரம்

கடலூர் : மறைமுகத் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.


கடலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12, திமுக 11, தேமுதிக 1, பாமக 2, தமாகா 2, மதிமுக 1 என்ற விதத்தில் கைப்பற்றியிருந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக கவுன்சிலர் திருமாறனும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கவுன்சிலர் கந்தசாமியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிமுக கவுன்சிலர் திருமாறனுக்கு 15 பேரும் கந்தசாமிக்கு 14 பேரும் வாக்களித்ததால் அதிமுக கவுன்சிலர் திருமாறன் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்டார்.

கடலூர் மறைமுக தேர்தல் நிலவரம்

பின்னர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவை சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தயாநிதி போட்டியிட்டார். இதில் அதிமுக கூட்டணி தேமுதிக சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் வெற்றி பெற்றார்.


இதையும் படிங்க:

ஆதாரமாக மரக்கட்டையைக் காட்டிய காவல்துறை - அன்பழகனுக்கு புழல்!

Intro:கடலூரில் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் அதிமுக வெற்றி துணைத்தலைவர் பதவி தேமுதிக வெற்றிBody:கடலூர்
ஜனவரி 11,

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து ஒட்டி இன்று மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்,துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12 திமுக 11 தேமுதிக 1 பாமக 2 தவாக 2 மதிமுக 1 இடங்களிலும் கைப்பற்றியது.

இன்று கடலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் பதவியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணிக்கு 15 கவுன்சிலர்கள் ஆதரவு தரவேண்டும் இதில் அதிமுக கூட்டணிக்கு 15 கவுன்சிலர்கள் உள்ளனர் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக கவுன்சிலர் திருமாறன் மனு தாக்கல் செய்தார் இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கவுன்சிலர் கந்தசாமி மனு தாக்கல் செய்தார். இதில் அதிமுக கவுன்சிலர் திருமாறன் 15 பேரும் கந்தசாமிக்கு 14 பேரும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக கவுன்சிலர் திருமாறன் மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்டார்.

மாலை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவை சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தயாநிதி போட்டியிட்டார். இதில் அதிமுக கூட்டணி தேமுதிக சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் 15 விட கூடுதல் ஒன்று பெற்று 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவித்தார்.

மேலும் தேர்தலில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர் மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.