சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த ஆலோசனையானது நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும், துறை வாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வரக்கூடிய நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாகவும், மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை சார்பில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: “போதைப்பொருள் நுழைவைத் தடுக்க போலீசாருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து! - Special Unit Form Trafficking Ganja