ETV Bharat / state

புதிய பாலம் திறப்பின் போது திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் மாறி மாறி கோஷம்!

author img

By

Published : Jun 11, 2022, 11:07 PM IST

புதிய பாலம் திறப்பின் போது திமுக,பாஜக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கோஷம்!
புதிய பாலம் திறப்பின் போது திமுக,பாஜக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கோஷம்!

கோவையில் கவுண்டம்பாளையத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இவ்விழாவின் போது திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : ராமநாதபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ராமநாதபுரத்தில் 3.15 கி.மீ தூரத்திற்கு ரூ. 238 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. பங்குசந்தை சாலையில் இருந்து ரெயின்போ பேருந்து நிறுத்தம் வரை 3.15 கி.மீ தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதே போல கவுண்டம்பாளையம் பகுதியில் 2019ஆம் ஆண்டு 1.17 கி.மீ தூரத்திற்கு ரூ. 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பால பணிகளும் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 11) காணொலி காட்சி மூலம் இரு பாலங்களையும் திறந்து வைத்தார்.

புதிய பாலம் திறப்பின் போது திமுக,பாஜக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கோஷம்!
புதிய பாலம் திறப்பின் போது திமுக,பாஜக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கோஷம்!

கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் (பாஜக), கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் (அதிமுக ), கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராம் (அதிமுக), கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.

இதனிடையே மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த பாஜக தொண்டர்கள், கட்சி கொடியுடன் 'பாரத் மாதாகி ஜெ’ என முழக்கம் எழுப்பியபடி வந்தனர். இதற்கு பதிலடியாக திமுக தொண்டர்கள் அமைச்சரை வரவேற்க நடப்பட்டு இருந்த திமுக கொடிக் கம்பங்களை எடுத்து, கையில் ஏந்தியபடி திமுக ஆதரவு முழக்கங்களை எழுப்பினர். அரசு விழா நிகழ்ச்சியில் திமுக, பாஜக தொண்டர்கள் மாறி, மாறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய பாலம் திறப்பின் போது திமுக,பாஜக, அதிமுக தொண்டர்கள் மாறி மாறி கோஷம்!

அரசு விழா நிகழ்ச்சியில் முழக்கங்களை எழுப்பக்கூடாது என அறிவுறுத்திய நிலையிலும், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுக தொண்டர்களும் கட்சிக் கொடியை வரவழைத்து கொடிகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் செந்தில்பாலாஜி வாகன போக்குவரத்தை தொடங்கிவைத்த போதும், திமுக, பாஜக தொண்டர்கள் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர்.

திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மேம்பாலம் என திமுகவினரும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலம் என அதிமுகவினரும், மேம்பாலம் கட்டுமானத்தில் மத்திய அரசின் பங்களிப்பும் இருப்பதாக பாஜகவினரும் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது திறக்கப்பட்ட இந்த பாலங்களால் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : ஆற்காடு வீராசாமி குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.