ETV Bharat / state

முகமூடி அணிந்து செல்போன்கள் திருட்டு; கோவையில் ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது

author img

By

Published : Aug 21, 2023, 5:43 PM IST

Etv Bharat
Etv Bharat

Odisha youths Arrested in Covai:சூலூர் அருகே தனியார் மில்லில் பணியாற்றும் வட மாநிலத்தவர்களின் செல்போன்களை திருடிச் சென்ற 3 முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

முகமூடி அணிந்து செல்போன் திருட்டு; கோவையில் ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் அண்ணா நகரில் பிரபல தனியார் மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லில் வட மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். வட மாநில நபர்கள் தங்குவதற்காக தனித்தனி அறைகள் மில்லுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இரவு நேரங்களில் அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் செல்போன்கள் திருடுபோவது வாடிக்கையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்து கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் வட மாநில நபர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் இதனைப் பார்த்து வெளியே வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்ற அக்கும்பல் திருடிய செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. டெல்லி அரசு அதிகாரி பணியிடை நீக்கம்.. முதலமைச்சர் உத்தரவு!

உடனடியாக, இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடும்பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது திருடு போன செல்போன்களை விற்பனை செய்வதற்காக கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கடைக்கு அக்கும்பலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து உள்ளார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: வீடு வழங்க கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒப்பாரி!

இந்த விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமத்குமார் மாலிக் என்பதும், இவருக்கு உறுதுணையாக பிரதாப் மாலிக், ராஜேஷ் மாலிக் என்ற இருவரும் இணைந்து இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், கருமத்தம்பட்டியில் பதுங்கி இருந்த மற்ற இருவரையும் இன்று (ஆக.21) கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நெல்லையில் மாவட்ட ஆட்சியர் - வனத்துறையிடையே பனிப்போர்? ஆட்சியரை விமர்சிக்கிறதா வனத்துறை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.