ETV Bharat / state

இளைஞரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த இளைஞர்கள்.. போலீஸில் அளித்த பகீர் வாக்குமூலம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 9:17 PM IST

பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை
பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை

Chennai youth Murder: சென்னை பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார் செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(28). இவர் நேற்றிரவு இவரது வீட்டிற்கு அருகில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்குப் பயங்கர ஆயுதங்களோடு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை மட்டும் அழைத்துச் சென்று ஆடைகளைக் கழற்றி அடித்தும், கத்தியால் வெட்டியும் துன்புறுத்தியுள்ளனர்.

கத்தியால் வெட்டும் போது கத்தி பிரசாந்த்தின் பிறப்புறுப்பில் பட்டுவிட்டது. பின்னர் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி விட்டுத் தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாந்தை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மேடவாக்கம் அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த சரத்குமார்(எ) சரத்(24), ஜெபராஜ்(21), இமானுவேல்(20), வேளச்சேரியைச் சேர்ந்த திலோத்தீஸ்வரன்(22), முகமது ஷகீல்(20), ஆகிய 5 பேரை பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், பிரசாந்த் எங்கள் அனைவரையும் அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவதும், தாயைப் பற்றி இழிவாகப் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், தங்களை எப்போதும் கீழ் நிலை படுத்தி வந்ததால் அனைவரும் ஒன்று சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். விசாரணைக்குப் பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆயுள் தண்டனை கைதிக்கு இடைக்கால ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.