ETV Bharat / state

எந்த முகக் கவசம், எப்படி அணியலாம் - மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்

author img

By

Published : Apr 16, 2020, 8:55 PM IST

-commissioner-g-prakash
-commissioner-g-prakash

சென்னை: கரோனா வைரசிலிருந்து தற்காத்துக்கொள்ள அணிவிக்கும் முகக்கவசங்களை எவ்வாறுப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய விரிவான காணொலியை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வீடுகளிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அப்படி அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் வசூலிக்க என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், எந்த வகையான முகக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து மக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்

அந்தக் குழப்பத்தை தெளிவுப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாரத்துறையிர் போல் உயர் ரக முகக்கவசங்களை மக்கள் அணிய அவசியமில்லை. அவர்கள் கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அருகே செல்ல வேண்டியுள்ளதால் அவற்றை அணிகின்றனர். கரோனா பாதிக்கப்பட்டவர்களில் இருந்து விலகி இருக்கும் மக்கள் சாதாரணமான காட்டன் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் எனவும், கைக் குட்டையை இரண்டாக மடித்து அணியலாம் என்றும், துப்பட்டா பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கிய ஊராட்சி நிர்வாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.