ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்கிய ஊராட்சி நிர்வாகம்!

author img

By

Published : Apr 16, 2020, 9:48 AM IST

சேலம்: தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை தேக்கம்பட்டி ஊராட்சி பிரதிநிதிகள் இன்று வழங்கினர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கிய ஊராட்சி நிர்வாகம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முகக் கவசங்களை வழங்கிய ஊராட்சி நிர்வாகம்

கரோனா வைரஸ் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்து அமல்படுத்தியுள்ளன. சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனோ வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பிலும் தொடர்ந்து முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்து மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் ஊராட்சி பிரதிநிதிகள் சார்பில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் கிராம தூய்மைப் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும் ஊராட்சி பிரதிநிதிகள் செலவில் தேக்கம்பட்டி கிராமம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கரோனோ வைரஸ் தடுப்பு குறித்து ஊராட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

தூய்மைப் பணியாளர்களை ஊக்குவித்த தேக்கம் பட்டி ஊராட்சி உறுப்பினர்கள்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேக்கம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞானம், "கரோனா தொற்று பரவலைத் தடுக்க தொடக்கம் முதலே தேக்கம்பட்டி கிராமத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி வருகிறோம். கிராம மக்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். கரோனோ வைரஸ் தொற்று பரவல் முடியும்வரை எங்களது விழிப்புணர்வு பணி தொடரும் " என்றார்.

இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சுசீந்திரகுமார், தனது சொந்த செலவில் கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கருப்பூர் பகுதி உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் கபசுரக் குடிநீரையும் அவர் இலவசமாக வழங்கினார்.

இதையும் படிங்க: காய்கறிச் சந்தை, மளிகைக்கடை மூடல்: தி.மலையில் வெறிச்சோடிய சாலைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.