ETV Bharat / state

வங்கக்கடலில் புயல் சின்னம்: 118 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 10:55 PM IST

புயல் காரணமாக 118 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
புயல் காரணமாக 118 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவியுள்ள புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - கொல்கத்தா, விஜயவடா வழித்தடம் வழியாக வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை (டிச. 3) புயலாக வலுபெற உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இந்தப் புயல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (டிச. 5) வலுவிலந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் எனத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடதமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலிலும், ஆந்திரா, ஓடிசா, மேற்கு வங்க மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு உள்பட புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள் வழியாகச் செல்லும் 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கொல்கத்தா, விஜயவடா வழித்தடம் வழியாக வடஇந்தியா மற்றும் கிழக்கிந்தியா செல்லும் 118 ரயில்களும் சென்னை சென்ட்ரல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் இன்று(டிச.2) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லி செல்லும் தூரந்தோ விரைவு ரயில் (டிச.4) ஆம் தேதியும், மறுமார்க்கமாக சென்னை வரும் ரயில்( டிச.5)ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படும். புயலானது ஆந்திர கடலோரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், சென்னை, பெங்களூர், கன்னியாகுமரியில் இருந்து விஜயவாடா வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை - விஜயவாடா வரைச் செல்லும் ஜன் சாதப்த்தி ரயில், இதே ரயில் மறுமார்க்கத்திலும், சென்னை -நிஜாமுதின் ரயில் டிசம்பர் 4ஆம் தேதியும் இதே ரயில் மறுமார்க்கத்தில் 5-ஆம் தேதியும், சென்னை - ஹைதராபாத், சென்னை - புதுடில்லி, சென்னை - அஹமதாபாத், நாகர் கோயில் ஷேலிமார், சென்னை - விசாகப்பட்டினம், பெங்களூரு, கொல்லம் போன்ற பகுதிகளில் இருந்தும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தெற்கு மத்திய ரயில்வே அறிவுறுத்தலின் படி தெற்கு ரயில்வே சார்பில் 118 ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. குறிப்பாக சென்னை - கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்களும், மதுரை நிஜாமுதீன், சென்னை - அகமதாபாத், மதுரை - சண்டிகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டதக்கது.

தில்லி ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து டில்லி செல்லும் 'கிராண்ட் ட்ரங் விரைவு ரயில்' டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக தில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில் டிச.5, 6, 7 ஆகிய தேதிகளிலும், சென்னை - தில்லி தமிழ்நாடு விரைவு மற்றும் திருவனந்தபுரம் - தில்லி கேரளா விரைவு ரயில் டிச.3, 4 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக டிச.5, 6 ஆகிய தேதிகளிலும், மதுரை - தில்லி 'சம்பர்க் கிராந்தி விரைவு ரயில்' டிச.5-ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.7-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்" என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்தாகும் வடமாநில ரயில்கள் பட்டியல்: சென்னை சென்ட்ரல் அகமதாபாத் நவ்ஜீவன் அதிவிரைவு ரயில் டிச.3, 4, 5 தேதிகளிலும் மறுமார்க்கமாக டிச.4, 5, 6 தேதிகளிலும், சென்னை - பீகார் கங்கா காவேரி விரைவு ரயில் டிச.4ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.6ஆம் தேதியும், மதுரை - சண்டீகர் அதிவிரைவு ரயில் டிச.3-ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.4-ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

தொடர்ந்து, சென்னை - விஜயவாடா 'பினாகினி அதிவிரைவு ரயில்' இருமார்க்கமாக டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும், ஷாலிமர் - சென்னை 'கோரமண்டல் விரைவு ரயில்' டிச.3, 4, 5 தேதிகளிலும், மறுமார்க்கமாக டிச.4, 5, 6 தேதிகளிலும், திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கேந்ரா விரைவு ரயில் டிச.4ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.7ஆம் தேதியும், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா 'வந்தே பாரத் ரயில்' இருமார்க்கமாகவும் டிச.4,5 ஆகிய தேதிகளிலும்,

தில்லி- புதுச்சேரி விரைவு ரயில், நாகர்கோவில் - ஷாலிமர் 'குருதேவ் அதிவிரைவு ரயில்', பனாரஸ்- ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில், ஹவுரா- புதுச்சேரி அதிவிரைவு ரயில் டிச.3-ஆம் தேதியும், மறுமார்க்கமாக டிச.6-ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகினறன. இது மட்டுமின்றி கேரளத்தின் கொச்சுவேலி, திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கர்நாடகத்தின் பெங்களூர் என தெற்கு ரயில்வே உட்பட்ட பகுதியில் இருந்து செல்லும் 118 ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து இல்லை: சென்னையில் தற்போது புயல் காரணமாக பெய்து வரும் மழையால் புறநகர் ரயில்களின் சேவைகள் தடைபடலாம் என நிர்வாக ரிதியாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போதைய நிலவரப்படி சென்னை கோட்டத்தில் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்யவில்லை என்றும் அப்படி ரத்து ரயிலகள் செய்யபடுவதாக இருந்தால் விரைவில் தெரிவிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் குழுக்கள்! மழை பாதிப்பு எச்சரிக்கையுள்ள 8 மாவட்டங்களுக்கு விரைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.