ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் @ top ten news at 9 am

author img

By

Published : Oct 25, 2021, 9:16 AM IST

top-ten-news-at-9-am
top-ten-news-at-9-am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

1. சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் மேலும் ஒருவர்; முதலமைச்சர் உத்தரவு!

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

2. பொறியியல் கல்வியில் ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு

அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில், ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதற்காக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.

3. அமைச்சருக்கு கமிஷன் வரவே தமிழ்நாடு மின்சார வாரியம்- அண்ணாமலை

மின்சாரத்துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகவே தமிழ்நாடு மின்சாரத்துறை வாரியம் செயல்படுகிறது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

4. கரும்புக்கு ரூ.200 கோடி நிலுவைத் தொகை வழங்கல் - அமைச்சர் ஆர். சக்கரபாணி

விவசாயிகளின் நன்மை கருதி கரும்புக்கு ரூ.200 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

5. கோயில் தங்கத்தை உருக்கி பிஸ்கட் ஆக மாற்ற அரசு குறி- ஹெச்.ராஜா

கோயில்களில் இருக்கும் தங்கத்தை உருக்கி பிஸ்கட்டுகள் ஆக்கவே அரசு குறியாக செயல்படுகிறது என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

6. கழிவு நீர் வாய்க்கால்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் புதிய கழிவு, மழை நீர் வாய்க்கால்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யும்படி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

7. ஆர்யன் கான் விவகாரம்; ஷாருக் கானுக்கு அத்வாலே அறிவுரை!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் ஆர்யன் கான் விவகாரத்தில், அவரின் தந்தை ஷாருக் கானுக்கு ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிவுரை கூறியுள்ளார்.

8. வேனில் கடத்தப்பட்ட குட்கா - 3 பேர் கைது

சென்னை ராமாபுரத்தில் வேனில் கடத்திவரப்பட்ட 318 கிலோ குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

9. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிச்சையல்ல, உரிமை- ஃபரூக் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பிச்சை அல்ல, எங்கள் உரிமை என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா கூறினார்.

10. HBD சக்திஸ்ரீ கோபாலன்

பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.