ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

author img

By

Published : Sep 1, 2021, 9:23 AM IST

top ten news at 9 am  top ten news  top ten  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை 9 மணி செய்தி சுருக்கம்  9 மணி செய்தி சுருக்கம்
செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1. 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு

கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில், தமிழ்நாட்டில் இன்றிலிருந்து (செப்டம்பர் 1) ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

2. உலக கடிதம் எழுதும் நாள் - இன்றிலிருந்து கடிதம் எழுதத் தொடங்குங்கள்

உலக கடிதம் எழுதும் நாளான இன்று உங்கள் அன்பானவர்களுக்கு கடிதம் எழுதத் தொடங்குங்கள். கடிதம் எழுதுவதில், கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அலாதியானது.

3. புகையிலை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் - ராமதாஸ்

முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய சட்டத் திருத்தம் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்கப்படுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

4. 'மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி; ஆதாரங்கள் விரைவில் வெளியீடு'

விநாயகர் சதுர்த்திக்கு முழு ஆதரவு கொடுப்போம் எனத் தெரிவித்த வேலூர் பாஜக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாகச் செயல்பட்டதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

5. மாற்றுத்திறனாளிகளைப் புறக்கணிக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

6. ஆத்தூர் அருகே பேருந்து விபத்து: 20 பேர் காயம்

நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.

7. ஆந்திராவுக்குச் செம்மரம் வெட்டச் சென்ற ஐவர் கைது

ஆந்திர மாநிலத்திற்குச் செம்மரங்கள் வெட்டச் சென்ற ஐந்து பேரை திருத்தணி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

8. தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது: 20 பவுன் நகை, 2 பைக் பறிமுதல்

தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

9. #HBDமுமைத் கான்... ’ஏன் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமரி’

திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்த முமைத் கான் இன்று தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

10. 51 நாள் தானா... சூர்யாவின் செயலால் அசந்துபோன படக்குழு

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 51 நாள்களில் நிறைவடைந்துவிட்டதாகப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.