ETV Bharat / state

'மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி; ஆதாரங்கள் விரைவில் வெளியீடு'

author img

By

Published : Sep 1, 2021, 8:22 AM IST

விநாயகர் சதுர்த்திக்கு முழு ஆதரவு கொடுப்போம் எனத் தெரிவித்த வேலூர் பாஜக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாகச் செயல்பட்டதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

we support vinayagar chaturthi
we support vinayagar chaturthi

வேலூர்: பாஜக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிமுடன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அவர் கூறியதாவது, "விநாயகர் சதுர்த்தியை நடத்துவதற்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும்.

ராகவனின் காணொலியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி. இக்காணொலி வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை விரைவில் பத்திரிகையாளர்களிடம் வெளியிடுவோம்.

தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வரக்கூடிய பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க திமுக செய்த சூழ்ச்சியே இதற்குக் காரணம்.

வரும் 19ஆம் தேதி ஆயிரம் இஸ்லாமியர்கள் பாஜகவில் இணைகிறார்கள். இந்து சமய நம்பிக்கைகளைக் கேலி செய்வதையும், வழிபாட்டு உரிமைகளைத் தடுப்பதையும் திமுக தொடர்ந்து செய்கிறது. வெள்ளி, சனி வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறும் இந்த அரசு டாஸ்மாக் மூலம் குடிகாரர்களை உருவாக்கிவருகிறது.

விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு திமுக அரசு தடைவிதிப்பது கண்டனத்திற்கு உரியது. விநாயகர் சதுர்த்திக்கு நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.