ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM

author img

By

Published : Oct 23, 2021, 7:34 PM IST

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1. ஜப்பான் இளவரசியாக கடைசி பிறந்தநாளை கொண்டாடிய மாகோ!

ஜப்பானிய இளவரசி மாகோ, சாமானியனை திருமணம் செய்துகொள்வதால், இளவரசியாக தனது இறுதி பிறந்தநாளை கொண்டாடினார்.அவருக்கு வயது 30. ஜப்பானிய அரச குடும்ப நடைமுறைபடி, அக்குடும்பத்தில் உள்ளவர்கள் சாமானியரை திருமணம் செய்துகொண்டால், அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலக்கிவைக்கப்படுவர்.

2. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படம் 'கூழாங்கல்'!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான 'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3. டாப் கிளாஸ் தரத்துடன் குறைவான விலையில் 'வலிமை சிமெண்ட்' அறிமுகம்

குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் தமிழ்நாடு அரசின் "வலிமை சிமெண்ட்" முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

4. சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்!

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியனும், உறுப்பினர்களாக முனைவர் கி. தனவேல், பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் ஆர். இராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

5. வீடியோ: சாலையில் கையேந்தும் காவலர்; வேடிக்கை பார்க்கும் காவல் அலுவலர்!

இரவு நேரத்தில் மணிமங்கலம் சோதனைச் சாவடியை கடக்கும் வாகன ஓட்டுநர்களிடமிருந்து, காவலர் ஒருவர் கையூட்டு பெறும் காணொலி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

6. வீடு தேடி கல்வித்திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

வீடு தேடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த வாரம் தொடங்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

7. நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள் - நீதிமன்றம் அதிரடி

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் பணியின்போது, கொற்றலை ஆற்றில் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருள்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8. நியாய விலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.23) தொடங்கி வைத்தார்.

9. பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள் - மையத்திற்குள் நகை, பெல்ட், ஷூ அணிய தடை

பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிகம் உயரம் கொண்ட செருப்பு போன்றவை அணியக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என நீட் தேர்வு கட்டுபாடுகளை போல ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வறை நுழைவுச்சீட்டில் அறிவுறுத்தியுள்ளது.

10. கைத்தறி உள்ளிட்ட துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்கம்!

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.