ETV Bharat / state

தமிழ்நாடு மீது மோடிக்கு தனிக்கவனம்! - சென்னையில் பேசிய அமித்ஷா

author img

By

Published : Nov 12, 2022, 5:09 PM IST

Updated : Nov 12, 2022, 6:47 PM IST

Etv Bharatநாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது - அமித்ஷா
Etv Bharatநாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது - அமித்ஷா

நம்முடைய நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் பேசிய போது தெரிவித்துள்ளார்.

சென்னை:இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ-12) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர மாநில நிதியமைச்சர் புக்கண்ணா ராஜேந்திரநாத் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், எம்.எஸ்.தோனி, ஓபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. அரசு சார்பாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள் நான், அவர்கள் சார்பாக வாழ்த்தவும் விரும்புகிறேன். இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தித் துறையில் உங்கள் வளர்ச்சி, எங்களையும் பெருமையடையச் செய்கிறது. திருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் தொடங்கிய இந்தப் பயணம், மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது" என கூறினார்.

விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘விழாவில் பங்கேற்றறிற்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சீனிவாசனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னுடைய நண்பர். ஏனெனில் 75 ஆண்டுகாலம் ஒரு நிறுவனம் வந்து பூர்த்தி செய்கிறது என்றால் அந்த துறையில் மிகப்பெரிய லீடராக இருக்கிறது என்று அர்த்தம். அவருக்கு என் நல்வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு மீது மோடிக்கு தனிக்கவனம்! - சென்னையில் பேசிய அமித்ஷா

முதலில் நன்றி சொல்கிறேன் என்று சொல்லி இருந்தார். நான் அவரிடம் சொல்கிறேன். நட்புக்கு இடையில் நன்றி உணர்வே தேவையில்லை. நமக்குள்ளே இருக்கிற அந்த நட்புக்காக நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். கிரிக்கெட் தொடர்பாக எங்களுக்குள்ள ஒரு நல்ல உறவு வளர்ந்து கொண்டு இருந்தது. விளையாட்டுத்துறையை பொறுத்த வகையிலே அவருடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் 100% வெற்றியாக மாற்றக்கூடிய திறமை திரு சீனிவாசன் அவர்களுக்கு உண்டு. அதே போல விளையாட்டு வீரர்களுக்காக அதிகம் அவர் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட்டவர் திரு சீனிவாசன் அவர்கள். இன்று இந்தியா சிமெண்ட் 75 ஆம் ஆண்டு மிக பெரிய இலக்கை எட்டி இருக்கிறது.

எந்த தேசத்திலும் நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பை பொறுத்துதான் இருகிறது. நம் நாட்டிற்கு தேவையான சிமெண்டை சுயமாக தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். சிமெண்ட்துறையில் மட்டுமின்றி ஏற்றுமதி,கப்பல் துறை போன்ற வற்றிலும் முத்திரையை பதித்து கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது. 2025ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பு 5 டிரிலியன் டாலரில் இருக்கும். ஒரு ஆய்வு அறிக்கையில் 2027 ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும்.

பலவிதமான புதிய வாய்ப்புகளை இந்திய அரசு உருவாக்கிக் கொடிக்கிறது. புதிய தொழிற்சாலைகள் சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளில் உருவாக்குவது இந்த அரசு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆய்வு மற்றும் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறது. ஆய்வு மற்றும் வளர்ச்சி பாதையில் இந்தியா வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த நாட்டில் அறுவது கோடி மக்களின் வாழ்வாதாரம் தினப்படி கழிப்பறை,வீடு உள்ளிடவற்றை கொடுத்தது. நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்து சேர்க்க முக்கிய பங்கு வகித்தது.

ஊழல் அற்ற ஆட்சி:ஊழல் அற்ற ஆட்சியை உலகுக்கு எடுத்துக்காட்ட தற்போது அரசு இருக்கிறது. இருண்ட பகுதியில் ஒளிரும் நாடக இந்தியா உள்ளது. செல்போன் வங்கி மூலம் பரிமாற்றம் செய்கிற மதிப்பு 12.11 இலட்சம் கோடி அளவிற்கு பணம் பரிமாற்றம் நடக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துகிறார். ஒவ்வொரு துறையிலும் ஆண்டு கணக்கில் 900 புள்ளிகளாக இருந்த சூழ்நிலையில் தற்போது 6000 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைக்காக 8900 கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டம் 2 பாகத்திற்காக 3770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1440 கோடி ரூபாயில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது. தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் மூத்த மொழி தொன்மையான மொழி. ஆகவே தமிழ் மொழியின் மேன்மை மொத்த இந்தியாவுக்கும் பெருமை. மருத்துவ கல்லூரியிலும்,பொறியியல் கல்லூரியிலும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியிலையே பாடத்தை கொடுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்" என கூறினார்

பின்னர் இந்தியா சிமெண்ட்ஸின் பவள விழா நினைவுத் தூணை காணொலி காட்சி வாயிலாக அமித்ஷா திறந்து வைத்தார். 3D பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பவள விழா நினைவுத் தூண் இந்தியா சிமெண்ட்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மேடையில் அறிவிக்கப்பட்டது. இந்தியா சிமெண்ட்ஸின் பவள விழாவையொட்டி தபால் தலையை அமிஷ் ஷா வெளியிட்டார். இந்தியா சிமெண்ட்ஸில் நீண்ட காலம் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:மீண்டும் இணையும் ஓபிஎஸ், ஈபிஎஸ்... பிரதமர் மோடி முயற்சி.?

Last Updated :Nov 12, 2022, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.