ETV Bharat / state

கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்வு

author img

By

Published : Aug 9, 2022, 9:25 PM IST

கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1000 ரூபாயிலிருந்து 5000 வரை உயர்வு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1000 ரூபாயிலிருந்து 5000 வரை உயர்வு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை: கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு 1000 ரூபாயிலிருந்து 5000 ஆக உயர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினமான (ஆகஸ்ட்15) ஆம் தேதியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம், ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆம் ஆண்டினை கொண்டாடிடும் வகையில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அனைவரின் மனதிலும் தேசம் சுதந்திரம் அடைந்ததன் பெருமிதத்தை உணரும் வகையில் "அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி" எனும் மாபெரும் இயக்கத்தினை இந்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியினை அனைத்து வீடுகளிலும் ஏற்றி இந்திய சுதந்திரத்தினையும், அதற்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்டத் தியாகிகளையும் நினைவில் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல் கிராம சபைக் கூட்டத்தில் முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசினைத் தொடர்ந்து இந்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரித்தல், இருப்பு வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மற்றும் இடமாற்றம் ஆகியவற்றை தடைசெய்துள்ளது என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஊரக பகுதிகளில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றிட கிராம சபையில் உறுதி ஏற்க வேண்டும்.

இதையும் படிங்க:வாணியம்பாடி அருகே தவறான பிரசவத்தால் உயிருக்கு போராடும் தாய்; உறவினர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.