ETV Bharat / state

வாணியம்பாடி அருகே தவறான பிரசவத்தால் உயிருக்கு போராடும் தாய்; உறவினர்கள் சாலை மறியல்

author img

By

Published : Aug 9, 2022, 1:07 PM IST

வாணியம்பாடி அருகே பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உதயேந்திரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(26). இவரது மனைவி சுசிசந்திரகா(25) இவருக்கு தலைப்பிரவசத்திற்காக உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31.07.2022 அன்று அனுமதிக்கப்பட்டார்.

பிரசவத்திற்கும் லஞ்சம் : இந்நிலையில் பிரசவத்தின்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் ரூ.2000 பணம் லஞ்சம் கேட்டதாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியரே சுகப்பிரசவம் பார்த்தபோது, குழந்தை பிறக்கும் சமயத்தில் தொப்புள் கொடியுடன் சதையை கத்தரித்து குழந்தையை வெளியே எடுத்து பின்னர் தையல் போட்டுள்ளனர். பின்னர் இருதினங்களுக்கு பிறகு, தையல் பிரிந்ததால் சசிசந்திரக்காவின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பிரசவம் பார்த்த செவிலியர்: அவரை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. பின்னர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சுசிசந்திரகா அனுப்பி வைக்கப்பட்டார்.

அரசு பெருந்தை சிறைப் பிடித்த பொதுமக்கள்
அரசு பெருந்தை சிறைப் பிடித்த பொதுமக்கள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்: இந்நிலையில், அங்கும் மருத்துவர்கள் சிகிச்சையளிக்காமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால், சுசிசந்திரகா உயிருக்கு போராடி வருவதாகவும் முறையாக சிகிச்சையளிக்காத ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுசிசந்திரகாவின் உறவினர்கள் வாணியம்பாடி-கைலாசகிரி சாலையில் இன்று (ஆக.9) அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி அருகே பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளித்த செவிலியர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல்

பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள இளம்பெண்
உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள இளம்பெண்

விசாரணை: பின்னர் இதுகுறித்து வட்டார தலைமை மருத்துவர் அலுவலர் பசுபதி, 'சுசிசந்திரிகா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், செவிலியர் பிரசவத்திற்கு ரூ.2000 பணம் பெற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றும் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - போராட்டம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.